பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தேசிய இலக்கியம் அழகாகக் காட்டுவார். அன்பு எல்லைமீறி அருளாக ஆகிவிடுமேயானால், அப்பொழுது என்ன நிலையைக் காண் கின்றோம் நாம்? மனித மனம் பக்குவப்பட்ட அந்த நிலை யிலே மேன்மைபெற்ற அந்த நிலையிலே, பொருள்கள் வழங்கும் காட்சியே மாறிவிடுகிறது. அங்கே இவன் காணு கின்ற காட்சிக்கும். அன்பு இல்லாதவன் காணுகின்ற காட்சிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்கின்றோம். மற்றவர்கள் காணுகின்ற காட்சிக்கும் அன்புள்ளவன் காணுகின்ற காட்சிக்கும் என்ன வேறுபாடு காணப்பெறும் என்பதை இராமகிருஷ்ண பரம ஹம்ஸர் அழகாகச் சொல் கிறார். அன்புடையவன் எல்லாவற்றையும் ஆண்டவனாகக் காணுகின்றான். அன்புடையவன் கானும்போது எல்லாம் ஆண்டவன் வடிவமாகவே காணுகின்ற காரணத்தால் வேறு பிரித்து என்ாணுவதற்கே வேலையில்லாமல் போய்விட்டது. எல்லாம் ஆண்டவன். என்றால், பிறகு இரண்டாவது என்று எண்ணுவதற்குப் பொருள் இல்லையன்றோ? அன்பு இல்லாதவன் காணுகின்ற காட்சி எப்படித் தொடங்குகிறது? நான் என்று தொடங்குகிறது. நான் என்ற அந்த அகங்காரம் வந்துவிடுமேயானால், அடுத்தவன், அடுத்தது என்று விரிந்து சென்று கொண்டேயிருக்கும். உலகம் முழுவதிலும் வேறுபட்ட பொருள்களாகக் காட்சி தரும். எத்தனை எத்தனை பொருள்கள் தாயுமானவர் அதனைக் கண்டு அஞ்சினார், "அருளால் எதையும் பார் என்றான்! அதனை அறியாது சுட்டி என் அறிவாலே பார்த்தேன். இருளான பொருளன்றிக் கண்ட என்னையும் கண்டிலேன். என்னடி தோழி என்று பாடுகிறார். குருவாக வந்தவன். சொன்னான்: அப்பா உலகத்தைப் பார்க்கின்ற பார்வை அருள் பார்வையாக இருக்கவேண்டும். அருளாகிய கண்களால் பார்த்துவிட்டால் உலகத்தில் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுமில்லை. "அவன் அருளையே கண்ணாகக் கொண்டு பார் என்று சொன்னான். நான் அதனைக் கவனிக்காது என் அறிவாலே சுட்டிப் பார்க்கத் தொடங்கினேன். என் அறிவாலே