பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 11

3. இலக்கிய அடிப்படை

திருத்தொண்டர் புராணத்தை இயற்றிய சேக்கிழார் அநபாயன் என்ற சிறப்புப் பெயர் பூண்ட இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர். (கி.பி. 1118-1250) என்பது ஆராய்ச்சியாளர் கண்ட முடிவாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வளவு சிறந்த காப்பியம் ஒன்று தமிழ்நாட்டில் தோன்றுவதற்கு என்ன இலக்கிய அடிப்படை இருந்தது என்பதைக் காண்டல்வேண்டும்.

எவ்வளவு சிறந்த இலக்கியமாயினும், ஒன்று தோன்ற வேண்டுமாயின் அது தோன்றும் காலம் அந்தத் தோற்றத் திற்கு உதவி செய்வதாகவே இருக்கும். பன்னிரண்டாம் நூற்றாண்டு இத்தகைய இலக்கியம் தோன்றத்தக்க நிலைக் களனாக இருந்ததா என்று ஆராய வேண்டும். முற்பகுதியிர் கூறியவற்றிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தொடங்கிய சமயப் புரட்சியின் முடிவில் எழுந்ததே இந்நூல் என்பது நன்கு விளங்கும். அந்தப் புரட்சி எவ்வளவு வலிவுடையதாக அமைந்திருந்தது என்பதற்குக் கீழ் வரும் வரலாறு சான்று கூறும்.

கூற்றுவ நாயனார் என்பவர் திருத்தொண்ட்த் தொகை பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகளால் போன்றப் பெற்றவர்தாம். என்றாலும், அவர் களப்பிரர் இனத்தைச் சேர்ந்தவர். 'களந்தை முதல்வனார் என்று பெரியபுராணம் இவரைக் கூறுகிறது. தமிழ் நாட்டை வெற்றி கொண்ட அவர், தில்லைவாழ் அந்தணர்களை நாடித் தமக்கு முடிசூட்ட வேண்டினார். ஆனால், அவர்கள் சோழர்களைத் தவிர வேறு யாருக்கும் முடிசூட்ட இயலாதென மறுத்துவிட்டாலும், அவருடைய வலிமைக்கு அஞ்சிய அவர்கள் சேர நாட்டிற்கு ஓடிவிட்டார்கள். சிறந்த சிவபக்தர் என்று அறிந்திருந்தும், களப்பிரர் என்ற காரணத்தால் தில்லை அந்தணர் அவருக்கு முடி கவிக்க மறுத்தார்கள் என்றால், நாட்டு மக்களின் மன திலை எவ்வாறு இருந்ததென்பதைத் தெரிந்துகொள்ளலாம்.