பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 69 ஆதி மனிதன் முதல் இன்றைய மனிதன் வரை, மனக் கூறுபாட்டை ஆய்ந்து அதனை அடக்கி ஆள முயன்றுள் ளான். முன்பு கூறிய பற்று அறுதலுக்குச் சிறந்த வழி, அப் பற்றுத் தோன்றும் மனத்தை அடக்கிப் பழகுதலேயாகும். மனத்தை அடக்குதல் என்பது எவ்வளவு கடினமானது என்பதைக் கீழ்வரும் அனுபவ வார்த்தைகள் நன்கு விளக்கும்: - “அடல்வேண்டும் ஐக்தன் புலத்தைவிடல் வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு” (குறள், 348) சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் மனம் அடங்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே பராபரக்கண்ணி-தாயுமானார்; (169) 'மணி வெளுக்கச் சாணை உண்டு எங்கள் முத்துமாரியம்மா மனம் வெளுக்க வழியிலையே எங்கள் முத்துமாரியம்மா." - முத்துமாரி-பாரதியார்; இம்மூன்று மேற்கோள்களும் மூன்று காலத்தில் வாழ்ந்த பெரியார்களால் கூறப்பெற்றன. இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகை கூறி யதையே. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தாயுமானவரும், நம் காலத்தில் வாழ்ந்த பாரதி யாரும் கூறிச் சென்றனர். இவ்வளவு கடினமான மன அடக்கத்தைப் பெற்றமை யால்தான் அவர்களைப் பெரியார்கள் என்று கூறுகிறோம்: அஃது எவ்வளவு கடினமானது என்று அறிய வேண்டு மானால் ஒரு கணநேரம் கண்களை மூடிக் கொண்டு ஒன்றும் நினையாமல் இருந்து பார்த்தால் உண்மை விளங்கும். என்ன நடக்கும் என்பதனையுங்கூட ஒரு கணமேனும் கண்மூடி மெளனியாய் இருக்கவென்றால் இப்பாழ்த்தகன்மங்கள்