பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 83 ஆனால், திருநாவுக்கரசர் புராணத்தில் உள்ள பாடல் களைக் கொண்டு மகேந்திரன் காலத்திய முழுச் சரித்திரத்தை யும் அறிந்துகொள்ள முடியாது. எவ்வளவு தூரம் அவர் வாழ்க்கை மகேந்திரனைப் பாதித்ததோ, அவ்வளவுதான் நாவுக்கரசர் புராணத்தில் இடம்பெறும். மகேந்திரவர்ம னுடைய வெற்றிச் சிறப்புக்கள் இங்குக் காணப்பெறா. அவன் மாமல்லபுரம் சமைத்த திறனும் இப் புராணத்தில் இடம் பெறவில்லை. ஆனால், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணப் பாழியைத் தகர்த்து, குண்பர ஈச்சரம்' என்ற கோயிலாக அமைத்தான் என்பதை மட்டும் பெரியபுராணம் குறிக்கிறது. இக் காரியம் நிகழ, திருநாவுக்கரசர் காரணமாக இருந்தமை யின் இ ச் செ ய ல் கூறப்பெறுகிறது. இம்மாதிரியே. பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர், வாதாபியின்மேல் படை எடுத்துச் சென்று இரண்டாம் புலிகேசியை முறியடித்து, வாதாபியை அழித்த மிகப் பெரிய செய்தியுங்கூட இரண்டு வரிகள் மட்டுமே இடம் பெறுகிறது. சரித்திரப் பிரசித்தமான இப் போரைப்பற்றி இரண்டு வரிகளா பாடுவது என்றுகூடக் கேட்கத் தோன்றுகிறது. என்றாலும். சரிதத் தலைவர் செய்த செயல்களில் இதுவும் ஒன்றாதலின் பெரியபுராணம் குறித்தது. அவருடைய வரலாற்றில் இதனை ஒரு சிறந்த செயல் என்றுதான் குறிப்பிடவேண்டும். ஆனால் அவருடைய பிற செயல்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இஃது அவ்வளவு சிறப்புடையதன்று என்பதே ஆசிரியர் கருத்தாகும். எனவே, இச் செயல் புரிந்த சிறுத்தொண்டர் வரலாற்றை அறிவதால் ஓரளவு அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்மக்களின் மன நிலையையும் அறிகிறோம் அல்லவா? ஒரு சமுதாயம், காலச்சக்கரத்தில் அகப்பட்டுச் செய்த செயல்களையும், தன் விருப்பம்போல் செய்ய முயன்றதையும் அம் முயற்சியில் வெற்றியோ தோல்வியோ பெற்றதையும் சரித்திரத்தில் படிக்கிறோம். ஆனால், தனி மனிதர்களுடைய சரித்திரங்களில் இதற்கு மாறானவற்றைக் காண்கிறோம் எல்லா மனிதர்களும் செய்யும் செயல்களையே தானும்