பக்கம்:தேடி வந்த குயில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுதாத வரிகள் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! இமயத்தின் உச்சியில் ஏறிநின்று புலிக்கொடி பொறித்த தமிழன் பாடுவது போன்ற இந்தப் பாட்டுவரிகள் பாரதி தாசன் பாடியவை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். கொலை வாளினை எடடா-மிகு கொடி யோர்செயல் அறவே! என்ற வீரவரிகளும் புரட்சிக் கவிஞர் செய்த முழக்கமே! மூடப்பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும் மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த ஈடற்ற தோளா இளந்தோள - என்றும் - சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு நாணி உறங்கு நகைத்துநீ கண்ணுறங்கு! என்றும் தொட்டில் குழந்தையைத் துரங்கவைக்கும் போதும் தட்டி எழுப்பும் கருத்துக்களைப் பாடியவர் புரட்சிக் கவிஞர். பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது சிறுத்தைப் புலியே வெளியில் வா! இளைஞர்களைக் கூவியழைக்கும் இந்த வரிகளும், எழுச்சி மிகுந்த அந்தப் பேனா முனையில் பிறந்தவைதாம்!