உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்போது சேவல் சண்டை தியது! கீறியது! இனியன் கோழி கத்தியது ஏந்திழைக்கோ நிற்க இயலவில்லை. அதைவிட்டு ஓடிவிட்டாள். அவமானம் சூழப் போகிறதே என நினைத்து இனியனுமே கலங்கலுற்றான். ஏந்திழை ஓடியதைக் கண்டு மனம் நொந்தான். செங்கண்ணனின் சிரிப்பு வலுத்தது. ஊர் மக்கள் கைகொட்டி ஆர்ப்பரித்தார். ஆர்ப்பரித்தார். இனியன் கோழி வீழ்ந்துவிடும்--செத்துவிடும் எனச் சொல்லி ஒரு கிழவர் வாய் மூடுவதற்குள், செங் கண்ணன் கோழிமீது அக் கோழி ஒரு பாய்ச்சல் நடத்தியது. மறு பாய்ச்சல். -செங்கண்ணன் கோழிக்கு வயிற்றினிலே ஒரு காயம்! அடுத்த ஒரு மோதல் - பாய்ச்சல் !...... இனியனுக்குப் பெரு மகிழ்ச்சி! திடுமெனச் செங்கண்ணன் கோழி விலகிச் சென்று, இனியன் கோழி மேல் பாய்வதுபோல் போக்குக் காட்டிக் களம் விட்டு ஓடிற்று! தோல்வியால் முகம் தொங்கவிட்டான் செங்கண்ணன். அதே ஊர் மக்கள் இனியனுக்கு மாலையிட் டார். மாலைதன்னைக் கோழிக்கு அணிவித்து நானூறு பொன்னோடு வீடு வந்தான். குப்புற வீழ்ந்திருந்த ஏந்திழைக்கு வெற்றிச் சேதி கிடைத்திடவே-அத்தானை எதிர்கொண்டு தழு விக் கொண்டாள். விடவே மறுத்தாள். முத்த மழை - காதல் பெருவெள்ளம் உடைப்பெடுத்து ஓடிற்று; இன்பப் பிரவாகம்! ! 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/103&oldid=1687453" இலிருந்து மீள்விக்கப்பட்டது