உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனலைகள் தீயால் கிள்ளையை எண்ணிச் சிறு பிள்ளைபோல் அழுதான். “ ஏன் சோகம்?" என்று ஒரு தேன் “ஏன் குரல் கேட்டுத் திரும்பினான். கிள்ளையினும் கவின் மிக்காள். கீழ் வானத்துச் சூரியன்போல் கன்னங் கொண்டாள். உடலெடுப்பாய்த் தோன்றுகின்ற உடையமைப்பு ! காதலுக்கு வாவென்று தூது விடும் கண்ணின் கடை அழைப்பு! விற் புருவம்! அதன்மேலே விண்மீன்கள் போலே ஒளிர்கின்ற புள்ளிக் கூட்டம்! கார் கூந்தல் - கட்டி முடிந் திருக்கும் காட்சிக்கு இரண்டு நாட்கள். ஆ ட்களுக்குமேல் பிடித்திருக்கும் ! இருபது தாமரை மலர்மீது வண்டொன்று அமர்ந்தது போல் அவள் முகமீது ஒரு அழகுப் பரு! இன்ப உரு ! யாரென்றான்! ரோமென்றாள்! பெயர் கேட்டான். லெஜியா ! பெருவணிகன் மார்க்கசின் பேத்தி ! தகவல் பேத்தி! தகவல் தந்தாள்! காதல் அகவல் பாடும் அவள் விழி கண்டான். அவள் நெஞ்சம்! 66 புரிந்து கொண்டான், மயில், மிளகு, முத்து தரும் தமிழகம், எனக்கு மையல் தீர்க்கும் அழகனையும் அளித்தது என்றாள். " அவன் யார்?" அவன் கேட்டான். துணிச்சல்காரி அவன் தோள் சாய்ந்து, "நீர் தான்" என்றாள். "கடல் நீர் கரிக்குமம்மா!" எனக் கேலி பேசி அகன்று விட்டான். பருகு 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/12&oldid=1687362" இலிருந்து மீள்விக்கப்பட்டது