உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனலைகள் பேர் சொல்லி ! சக்திதனைக் காட்டி! முதுகிழ முத்தமிழர்-அவர் முதுகெலும்பு ஒடியுமட்டும் -மூளை யெல்லாம் சிதறுமட்டும்-அடிப்பதுதான் சைவமோ? அன்புக்கு மடைகோலும் அடியார் கூட்டம் இதுதானோ? மிகக் கொடுமை ! மிகக் கொடுமை !! பிள்ளைக் கறி கேட்பார் - பள்ளி யறைக்குப் பிறர் மனைவி வருதல் வேண்டு மென் பார்--ஆணை அணங்காக்கி மகவு பெற்று 'ஐயப்பா' என்பார்-அழுக்குமிகு என்பார்- அழுக்குமிகு சிவனுக்கு அடியார்கள்! இவர்கள் வளர்ந்தால் விடியாது நாடு! என் போன்ற இளைஞர்கட்குக் காதல் அல்ல முதல் வேலை-பாண்டியத்தில் உரிமைப் போர் துவங்கு வதே முதன்மைத் தொண்டு ! சாலையிலே சமணர் நடத்தலுமாகாதாம்! சம்பந்தன் வாக்காம் - குலச் சிறையின் சட்டமாம் ! அந்தத் தடை மீற சமணத் துறவிகள் இன்றே குவிய வேண்டும்! அதற்குத் தலைமையேற்க ஒருவன் வேண்டும் ! யார் அந்தத் துணிவுடையான்? யார் அந்தத் தலைமைச் சிங்கம்?" நலங்கிள்ளி கேள்வி கேட்டான் விண் ணோக்கி! பாண்டிநாட்டு மண்ணோக்கி !! பீலிவளையோ பெருவிருந்து அருந்தலாம் இன்றென்று பேரழகை * ஆடியிற் சரி பார்த்து, ஆவணி வீதி கடந்து, புரட்டு ஆசி ஆடி கண்ணாடி, ஆவணி வீதி வீதி, ஐப்பசி-ஐம்புலன்களின் பசி. 20 கூறும் புரோ மதுரையில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/26&oldid=1687376" இலிருந்து மீள்விக்கப்பட்டது