உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனலைகள் பேச்சிடையே விழித்துக் கொண்டாள்! வெறுங் கனவு. வீரன் வரவே யில்லை. விடிந்தது பொழுது! வேகமாய் நடந்தாள் அழுது! செல்லும் வழியிலே சித்திர வீதி! ஆங்கோர் இளைஞன்-அழகு சிகையின்றி-அணிமணிகள் எதுவுமின்றி நடக்கின்றான். மட்டும் மயில் தோகை! அவன் கையில் வாழ்க சமணம்' எனும் முழக்கம் நாவில்! யார் இவன்? சமணர் வெளிக் கிளம்பலாகா தெனும் சட்டத்தை மீறுகின்ற வீரன்? கிழவன் போனவழி போவதற்கு வருகின்றானோ? அம்ம வோ! அரண்மனைக் காவலர் காணின்-அழிவு தான் இவன் முடிவு! நடுங்கினாள் பீலிவளை அவனைக் கண்டு! நெருங்கினான் அத்துறவி! விழியெல்லாம் இருள் மேவ சுருள் கத்தி சுழல் வதுபோல் சுழன்று வீழ்ந்தாள் ! பொக்கை வாய்ச் சமணன்விட்ட போர்க் கொடியைத் தொடர்ந்து ஏந்த சக்கைகளாம் சைவர் செயல் எதிர்த் தொழிக்க-எழுச்சி பெற்ற பெருவீரன், நலங் கிள்ளி! அவன் கடந்து விட்டான், தூய காதலி னால் மயக்கமுற்ற காரிகையை ! எறிந்து விட் டான் இன்ப ஓவியம் தீட்டுகின்ற தூரிகையை ! ஓடி வழி மறைத்தாள். செல்லாதே " யென்று ! 22 66 " உயிர் எடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/28&oldid=1687378" இலிருந்து மீள்விக்கப்பட்டது