உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்துறைக் கருத்துக்கள் விரவும் இலக்கியங்களை நிறையப் படைத்துள்ள நம் கலைஞர் இங்கே அகத்துறை யிலும் தம் அறிவின் திறத்தைக் காட்ட எழுந்தவைபோல் இவை நிலவுகின்றன. ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு கொம்புத் தேன் கூடு! உள்ளேயோ ஒவ்வொரு படி மலைத் தேன் !! அந்தத் தேன் பிலிற்றும் தென் தமிழ்ப் பெருங்கடலில் மூழ்கித் திளைத்துப் பேரின்பங் கொள்ள உங்களுக்கு அழைப்பு விடுகின்றோம்; மலர் வண்டினை மதுமாந்த அழைப்பது புதுமையாகவே தோன்றும்; எனினும் எங்கள் கடமை அஃதன்றோ! இனி நீங்களும் உங்கள் தேனலைகளும் ...... இடையில் ஒரு வார்த்தை. ந்தத் தேனலை களுக்குத் தித்திக்கும் முகப்பு வரைந்தளித்த ஓவியர் மணியம் அவர்கட்கும், அச்சிட்டு உதவிய நாதன் அன் கம்பெனியாருக்கும் உளம் உவந்த நன்றி! ஆசிரியர் மு. க. அவர்கட்கு நன்றி க. அவர்கட்கு நன்றி கூற எங்களுக்கு வார்த்தையே கிடைக்கவில்லை! மீண்டும் வணக்கம். அன்புள்ள, முத்துவேல் பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/4&oldid=1687354" இலிருந்து மீள்விக்கப்பட்டது