உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனலைகள் மடல் அன்ப! ஒன்பதாம் மடல் தீட்டுகின்றேன். இன்ப வெள்ளம் என்றென்றும் உண்டென்று கை பிடித்தீர். துன்ப மழை ! சோகத் தொடர் கதை! இதற்குத்தான் பெண் பிறந்தாய் எனக் கூறி விட்டால் எதற்கத்தான் எழுதப் போகிறேன் ! இதய வலி தீர்ப்பதற்கு எப்போது வருகின்றீர்- மருந்து முகத்தோடு - எனக் கேட்டால்; விருந் துண்ண அழைக்கும்போது வீண் மதிப்பு ஏனத் தான் காட்ட வேண்டும்! போர் முடிந்து களம் தோய்ந்த குருதியெல்லாம் காய்ந்து பல நாளா யிற்றென்றும்-காக்கை கழுகொன்றும் அங்கு வட்ட மிடுவதில்லை யென்றும் கால் ஒடிந்து திரும்பியிருக்கும் வீரன் சொன்னான். களத்தி னிலே உன் காதலன் பெற்ற புகழ் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/40&oldid=1687390" இலிருந்து மீள்விக்கப்பட்டது