உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தேனலைகள் கொண்டும், கொவ்வைப் பழம் போன்ற வாய் மொழியால் எனை ஏமாற்றிய மாதவியின் கண் கூடுவரியை நானறிவேன் என்று பழித்துரைத் தான்! அதனினும் கொடுமையத்தான் நீங்கள் ! காட்டும் மெளனம்! 'வா என்றால் வந்து, போ' என்றால் போகும் நடிப்புமிகும் காண்வரிக் கோலத்தை அந்தக் கணிகையிடம் கிறேன் எனக் கற்புமணி மாதவியை ப கண்டிருக் இகழ்ந் இருக் துரைத்தான்! அவனினும் தீயவரே நீங்களென்று செப்புகின்றேன்; என் சிந்தையற்று கின்றீர், அதனாலே ! "மாலைப் பொழுதில் காதல் மயக்கத்தால் நான் வாடும்போது மயிற் சாயலும் அன்ன நடையும் காட்டாது மறைத்து, எவற் பெண்ணின் கோலத்தோடு என் எதிரே வரும் மாதவியின் உள்வரியாடலை உணர்வேன் என்று உறுமி நின்ற கோவலனினும் ஒருபடி உயர்ந்தவர் ஏமாற்றுவதில் நீங்களென்பேன், நீண்ட நாள் மறந்து விட்டதால்! 99 “மேகலை ஆர்ப்ப-சிலம்பு கொஞ்ச-காதல் மிஞ்ச என் முன் வந்து சுருண்டு நின்று, என்னைத் தழுவாமலே போய்விடும் மாதவி கற்ற புறவரி எனக்குத் தெரியும்!" எனப் புகன்ற அந்த வணி கனினும் மேம்பட்ட வஞ்சகர் நீங்கள், வஞ்சி யெனக்கு ஒரு வரியும் எழுதாத காரணத்தால் ! 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/42&oldid=1687392" இலிருந்து மீள்விக்கப்பட்டது