உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

MAY சிற்பி அவள் இதை உரக்கச் சொன்னாள். "என்னை ஒரு கவியாக்கிய இயற்கையே! நன்றியின் காணிக்கையாக ஒரு கவிதை ! இதை ஏற்றுக் கொள் : "மாமரத்தில் தாவுகின்ற மல்லிகையே பாமரர்கள் கூறுகின்ற 'சாதி' உன்னிடத்தில் இல்லையே ! " இதைப் பாடிவிட்டு அந்தக் குயிலாள் குதித்தோடி னாள். உலகத்தைப் பற்றியே கவலைப்படாத ஒரு அலட்சியம்... இளமையின் துடுக்கோடு சேர்ந்து கெ காண்டது. பிறகு அவள் மான்குட்டி தானே ! என்னென்னவோ ஆடிப் பாடினாள். ஆடிக் கொண்டே ஓடினாள். 'கலைவாணன்' என்று அகில உலகப் பட்டமளிப்பு விழாவிலே பெயர் சூட்டப் பட்ட ஒரு சிற்பி செய்த சிலை உயிரெடுத்து உலவு வது போல் படர்ந்து கிடந்த கொடிகளைத் தடவிப் பார்த்தாள். கலாப மொன்று களிநடம் புரிந்தது -அதனோடு போட்டி போட்டுச் சாயல் காட்டி னாள். அந்தச் சோலையின் செடிகளுக்கும், கொடி களுக்கும் பேச வாயிருந்தால், "அட பயித்தியமே!" என்ற பரிகாச வார்த்தையால் அவள் செவிடுபட்டு விடும். காது ஆட்ட பாட்டம் முடிந்து.... அவள் வரவுக் காகக் காத்திருந்த ஊஞ்சலிற் பாய்ந்தாள்; ஊஞ் சல் ஆடிற்று! மாமரத்தின் கிளை கொடுத்தது. அவ்வளவு வேகம்! 79 வளைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/85&oldid=1687435" இலிருந்து மீள்விக்கப்பட்டது