உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பி பொன்னழகன், சிலை நொறுங்கிக் கிடப்ப தைக் கூட மறந்து விட்டான். இளவரசியின் இதழ சைவை எதிர்பார்த்திருந்தான். அவளோ பேச முடியாமல் நின்றாள். அவள் நெற்றியில் வியர்வைத் துளிகள் ! அவள் கண்களில் பல மின்னல்கள்! அவள் நிற்பதற்குச் சக்தியற்றுப் போனாள். சிற்பி சொல்லாமலே அங்கு கிடந்த பீடத்தில் உட்கார்ந்தாள். அவள் பார்வையை மாற்ற வில்லை. அவன் மட்டும் உடைந்து கிடந்த சேரனின் கையை எடுத்து கைகளில் உருட்டிக் கொண்டிருந்தான். ஒரு ஆணழகன்; அவன் அரச குமாரனல் லன். அவன் மடியிலே ஒரு பேரழகி; அவள் அரச குமாரிதான். இப்படி ஒரு சிலை ! அந்தச் சிலையை அவள் பார்த்தாள். சிற்பியைத் தன் கண்களால் இழுத்து.... 86 'இந்தச் சிலை.... ? "... என்று அவள் கேட்டு முடிப்பதற்குள்..." அது அம்பிகாபதியும், அமரா வதியும் ” என்று அவன் பதில் வழங்கினான். " 'அம்பிகாபதி கவிஞன்; அமராவதி அரசகுமாரி! பொன்னழகன் கலைஞன்; வேல்விழி இளவரசி!" 66 அவள் இதை வாய்விட்டுப் பேச இயல வில்லை. சிற்பியின் விலாவில் மட்டும் ஒரு வேல் பாய்ந்திருந்தது போலிருந்தது. அவன் முகத்தில் ரேகைகள் மின்னல் வேகத்தில் பாய்ந்து மறைந்தன. 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/93&oldid=1687443" இலிருந்து மீள்விக்கப்பட்டது