உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேனலைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தேனலைகள் - பட்ட நாக்கு போல் தொங்குகின்ற தாடையின் அழகுபார் கண்ணே! சேரனின் நடை காட்டும் ! படை கண்டு கலங்காத வீரனின் தோற்றம் காட்டும்!' எனப் புகழ்ந்தான். "சரியத்தான் ஒப்புகிறேன்; பெட்டையொன்று வாங்கி வந் தாலும் முட்டையிடும்........ இதைக் கொணர்ந்து பயன் என்ன ? ' ஏந்திழையின் பேச்சுக்கு முதற் திலாய் நகை முழக்கிப் பின்னும் கூறலானான். துப்புரச் சிவந்த வாய்ப் பேரழகே! பசுமாடு, பெண்ணாடு, பெட்டைக் கோழி வளர்ப்பதிலே பால், முட்டையெனப் பயன் காணும் குறிக்கோள் ஒன்று மட்டும் உண்டு!... நான் சேவல் வாங்கி வந்த நோக்கத்தை உன் செவிதனிலே போட் டால் ஒப்பிடுவாய் என் செயலை ! எனச் சொன்ன அத்தானின் தோளில் சாய்ந்து, "புரிந்து கொண் டேன் உமதுள்ளம் - பெண்ணைப் புகழ்வதற்கு மயில் தன்னை அழைத்திடுவார்;- இனிமேல் ஆணைப் புகழ்வதற்கும் சேவல் தன்னைக் காட்டிட லாம் என்பதுதான் உமதெண்ணம்! எனச் சிரித் தாள். "அதிலும் தவறுகின்றாய் என் என் அன்பே! ஆணுக்குச் சேவல் தன்னை ஒப்பிடலாம்!.... மறுப் பாரில்லை! ஆனால் ஒன்று; பெண் குலத்தைப் புகழ்வதற்கும் ஆண் மயில்தான் தேவைப்படும் — அதையும் உணர்ந்திடுவாய்!' என்று கூறி அவள் 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/98&oldid=1687448" இலிருந்து மீள்விக்கப்பட்டது