பக்கம்:தேன்பாகு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19


"நாம் அரசனாக இருந்து என்ன பயன்? பணம் படைத்ததனால் ஒரு பயனும் இல்லை குனம் படைத்து யாருக்கும் அன்பாக இருந்து தவம் செய்தால்தான் உண்மையான மதிப்பு ஏற்படும். அப்போது யாகம் செய்தால் அது கிறைவடையும்' என்ற நல்ல புத்தி அவனுக்கு உண்டாயிற்று.

பிறகு அவன் யாகம் செய்வதை விட்டு விட்டு அடுத்தகாட்டில் உள்ள முனிவரிடம் போனான். அவர் காலில் விழுந்து பணிந்தான். "முனிவர் பிரானே, தங்கள் பெருமையை உணராமல் அவமதித்தேன். நானும் யாகம் பண்ணி புகழ் பெறலாம் என்று எண்ணினேன். ஆனால் உண்மையான அன்பும் சிரத்தையும் இல்லாமல் பொறாமையால் யாகம் செய்யப் புறப்பட்டேன். விலங்குகளும் எனக்குத் துன்பத்தை உண்டாக்கின. தாங்கள் செய்யும் யாகத்தில் நான் காணும் காட்சிகளுக்கு நேர் விரோதமாக, நான் செய்யப் புகுந்த யாகத்தில் கண்டேன். அப்போது நான் செய்யத் தொடங்கியது நியாயமான யாகம் அன்று, என்ற புத்தி எனக்கு வந்தது. நான் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும்." என்று சொன்னான்.

"நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லையே; நான் செய்த யாகத்தை நீ தடுக்கவில்லையே!" என்று முனிவர் சொன்னார். -

அதன் பிறகு அந்த அரசனும் அவருக்கு வேண்டிய அரிசி முதலியவற்றை வழங்கி வரலானான் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/21&oldid=1267786" இருந்து மீள்விக்கப்பட்டது