பக்கம்:தேன்மழை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பாண்டியன் நீங்காத மானமும் துரங்காத வீரமும் ஓங்கிய பெருமையும் ஒழுக்கமும் வாய்மையும் பழுத்த புலமையும் பழுதிலாத் திறமையும் உடையோ னாகி ஊராண்ட மன்னவன் அதிவீர ராம பாண்டியன் ஆவான். புதுவீர ராமனாம் அதிவீர ராமன் அறிஞராம் நிரம்ப அழகிய தேசிகர் மாணவன்! தென்காசி நகரத்து மன்னவன். பொய்யிலாப் புலவரைப் போற்றிய புரவலன். கோட்டைக் கொத்தளம் குடிபடை சூழ்ந்த நாட்டுக்கும் வேந்தன் பாட்டுக்கும் வேந்தன் ஒன்று கூட்டிய நட்பைப் பிரிக்கவும் பிரிந்த நட்பினைப் பின்னர் சேர்க்கவும் அறிந்தவன்; அரசியல் சாத்திரம் அளந்தவன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/102&oldid=926683" இலிருந்து மீள்விக்கப்பட்டது