பக்கம்:தேன்மழை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 106 அவர்களுள் ஒருத்தியோ ஆண்டு மாண்ட மகத நாட்டு மன்னவன் மனைவியாம்! குற்றம் புரிந்த மற்றொரு மங்கையோ கெளதம முனிவரின் கட்டில் மனைவியாம்! இச்சையோ டொருநாள் இந்திரன் அவளை இருட்டிலே முத்தம் இட்டான் என்பதைப் புராணம் புரட்டினால் புரிந்து கொள்ளலாம். தவஞ்செய் முனிவரின் தரும பத்தினி பருவ காலத்தில் பழுத்த மாங்கனி! அகலியை என்பாள் அழகின் விளக்கமாம்! வெண்ணிலா அவளெழில் கண்டு வியக்குமாம்! வதன. வட்டமும் மைவிழி வாசலும் துண்டில் புருவமும் துடிக்கும் பருவமும் நெய்கனிந் திருண்ட நீள்கருங் கூந்தலும் சேர்ந்து பிறந்த செவ்வா யிதழ்களும் கையும் காலும் மெய்யும் மேனியும் எவ்வாறு நன்கமைந் திருந்தல் வேண்டுமோ அவ்வாறு நங்கைக் கமைந்திருந் தனவாம்! நங்கையின் நடைகண்டு நாணிற்றாம் அன்னம். கட்டழகு மங்கையின் கன்னத்தைக் கண்டு தேமாங் கனிகள் திரும்பிக்கொண் டனவாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/109&oldid=926690" இலிருந்து மீள்விக்கப்பட்டது