பக்கம்:தேன்மழை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 வன்னிய வீரன் ஒடின இழைத்த நாட்களும் ஓடின. என்றென்றும் விரிந்தே இருந்திடும் வானம் ஈச்சங் கனிபோல் இருண்ட தோர்நாள். வானம் இருண்டதால் இருண்டது வையகம் இருண்ட பொழுதிலே எழுந்தான் முதலி. கரடி புலிகள்வாழ் காட்டிலே நடந்தும் பாதையைத் தடுக்கும் பருவதம் கடந்தும் பொன்முடித் தெலுங்கன் முன்வந்து வணங்கி நின்றனன் அந்த நெருப்பு முதலி! ஆந்திர வேந்தன் அவனை நோக்கி. நீ யார்? என்று நிமிர்ந்து கேட்டனன். அடியேன் தங்கள் பகைவனின் பகைவன் குடிகளைக் காத்திடும் கொற்றவா கேளும் நிலத்திற்கு வீரனாய் நீருக்கு முதலையாய் - விரிந்த காட்டுக்கோர் வேங்கையாய் இருப்பவன் சாந்தமே அறியாக் காந்தவ ராயன். வாட்களோ, கொல்லன் வடித்தகூர் வேலோ - ஆட்களோ அவனை அழிப்பது கடினம். ஆயினும் அன்னவன் ஆசைக் கிழத்தியாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/130&oldid=926711" இலிருந்து மீள்விக்கப்பட்டது