பக்கம்:தேன்மழை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 164 மண்ணுலகில் வாழ்வாரை எல்லாம் மோட்ச மண்டலத்திற் கனுப்பாமல் அந்த மோட்ச மண்டலத்தை யேயிங்குக் கொண்டு வந்து மாந்தர்தம் முன்னிலையிற் காட்ட வேண்டும். பண்பறிந்த பெரியோரும் சிறந்த கேள்விப் பண்டிதரும் அறிஞர்களும் இருந்தா லன்றி உண்மையிலோர் நாட்டுக்குப் பெருமை இல்லை. உள்ளத்தில் ஒளியின்றேல் தெளிவு மில்லை ! தவித்தலையும் மாந்தர்துயர் தீர்த்தி டாமல் தலைவரெலாம் ஆளுக்கோர் கட்சி பேசி நவக்கிரகம் எனத்திரும்பிக் கொண் டிருந்தால் நாட்டுக்கு நல்வாழ்வா கிடைக்கும்? கொட்டிக் கவிழ்த்திடுதல் மிகயெளிதே! ஒன்று பட்டுக் கடமைசெயின் தன்னாட்சி பெறுதல் கூடும். புவித்தலைமை பெறுதற்கும் முடிமூ வேந்தர் பொற்காலம் காணுதற்கும் முயற்சி செய்வீர் ! இன்றுள்ள தமிழரெலாம் அந்த நாளில் இருந்தவர்போல் தலைநிமிர்ந்து வாழ்தல்வேண்டும். என்றென்றும் செந்தமிழைக் காத்தல் வேண்டும். ஏமாற்றும் மனப்பான்மை மறைதல் வேண்டும். நன்மைக்கு நம்செயலைப் பிறந்த நாட்டின் நலம்வேண்டி நம்முயிரை ஈதல் வேண்டும் குன்றைப்போல் தடைசெய்யும் சாதி பேதக் கொடுமையிலாச் சமுதாயம் அமைதல் வேண்டும். (செய்தி : தினத்தந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/167&oldid=926748" இலிருந்து மீள்விக்கப்பட்டது