பக்கம்:தேன்மழை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 168 பொன்கொண்டு செய்த புத்தர் சிலையை திருமங்கை ஆழ்வார் திருடிச் சென்றார். சிறுநிலா விளக்காம் சித்திரச் சீதையை இராவணன் கவர்ந்தான். ஏனவன் கவர்ந்தான்? கண்ணையும் கருத்தையும் கவர்ந்ததால் கவர்ந்தான். ஆழ்வார் திருடினார் அவரேன் திருடினார்? பற்றற்றான் பற்றினைப் பற்றிட முயன்ற பக்தர்க்குப் பொன்மீது பற்றேற் பட்டதால் நாகையில் இருந்த நல்லபொற் சிலையைத் திருவடி ஆழ்வார் திருடிச் சென்றார். அழகின் மயக்கம் யாரை விட்டது! வெம்புசெம் பொன்னை விரும்பா தார்யார்? பேரெழில் மிக்க பெண்டிரைக் கண்டு பெருமூச்சு விடாத பேரும் உண்டோ? சுயநலம் கொண்டோர் சுரண்டிக் குவிப்பதும் வறுமை யுற்றவர் வாட்ட முறுவதும் தீய நெஞ்சினர் திருட முயல்வதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/171&oldid=926752" இலிருந்து மீள்விக்கப்பட்டது