பக்கம்:தேன்மழை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 வாழைப்பூ வேதாந்தம் குழந்தைகளை ஈன்றிடவோ இந்துப் பெண்கள் குலவிமகிழ்ந் திருப்பதற்கோ பார்சிப் பெண்கள் அழகொடுதம் இல்லத்தை வைத்துக் கொள்வோர் ஆப்கானி தேசத்துப் பெண்கள் என்பர். பழையகதை இவையனைத்தும் இன்றோ இந்துப் பத்தினிகள் உடன்கட்டை ஏற வேண்டும்! விழியிலொன்று கெட்டுவிடின் முகத்தில் மற்றோர் விழிவாழக் கூடாதோ? கூடா தாமே! கால்கிழிந்த கட்டிலென்னும் பாடை மீது கதைமுடிந்த சதைப்பிணத்தைப் படுக்க வைத்தே நால்வரதைக் சுடுகாடு சுமந்து செல்லல் நடைமுறைதான் நாமிதனை அறிவோம்; ஆனால் பால்நிலவுப் பத்தினியும் பாடை மீது படுப்பானேன்? உடன்கட்டை ஏறு வானேன்? வேல்தொடரும் விழியுடையாள் கணவ னோடு வெந்துவிட வேண்டுமென்ப தென்ன நியாயம்? வேலையினால் உடல்தளர்ந்தும் வேளா வேளை விழித்திருந்தும் பசித்திருந்தும் காத்தி ருந்தும் காலமெலாம் கணவனுக்குத் தொண்டு செய்தும் கருவடைந்தும் அதனாலே அழகி முந்தும் தாலியெனும் வேலிக்குள் இருந்து வாழும் தையல்செத்தால் அவள்கணவன் சாவ தில்லை! மாலையிட்ட மணவாளன் மாண்டு போனால் மனையாட்டி ஏன்சேர்ந்து சாக வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/192&oldid=926773" இலிருந்து மீள்விக்கப்பட்டது