பக்கம்:தேன்மழை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 192 கொடிதான இவ்வழக்கம் ஒழிய வேண்டிக் கோவேந்தர் அக்பரவர் முயன்ற போது தடைபோட முயலாதே மன்னா என்றே சத்தமிட்டார் வைதீக வெறியர் தூக்க முடியாத மிகப்பெரிய பாராங் கல்லை முத்திட்டுப் பேசாமல் போதல் போலப் பிடிவாதக் காரரெல்லாம் எதிர்த்த தாலே பேரரசர் திட்டத்தை விட்டு விட்டார்! மாங்கனியில் துரங்குகின்ற 5ణమిGU போலும் மராட்டிமொழி இனிக்குமென்றும் காளி தாசன் பாங்குடைய காவியத்தைத் தாங்கி நிற்கும் பழுத்தபுகழ் வடமொழியே சிறந்த தென்றும் வீங்குடலார் பேசிவரும் இந்தி ஒன்றே வேற்றுமையைப் போக்குமெனக் கூற "எங்கள் ஆங்கிலமே அனைவரையும் இணைத்து வைக்கும் அரியமொழி” என்றுரைத்த துரையே கேளும்! பிறந்தாரை நீராட்டிப் பேணிக் காத்துப் பெருகவளர்த் திடுவதனை எங்கும் கண்டோம் இறந்தாரைச் சுடுவதையும் காணு கின்றோம் இங்கினிமேல் இக்கொடியர் இரவில் தூங்கி மறந்தாரைச் சுட்டாலும் சுடுவர்! அன்பு மனமில்லார் எதைச் செய்யத் துணிய மாட்டார்? வெறுங்கோயில் வெறிபிடித்தோர் செய்யும் தீமை விடத்தைவிடக் கொடிதான தீமை யாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/195&oldid=926776" இலிருந்து மீள்விக்கப்பட்டது