பக்கம்:தேன்மழை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

499 நெருப்பு நாடகம் கோடைவெயில் வந்ததனால் குயில்கள் கூவும் கொம்பெங்கும் தளிர்தொங்கும் வண்ணம் மேவும் ஏடுதரும் பைந்தமிழைக் கிளிகள் கற்கும் இலைக்குடையைப் பிடித்தபடி மரங்கள் நிற்கும் வாடைவரும் ஆங்காங்கே கானல் தோன்றும் வயல்காயும் வயல்வயிற்றில் வெடிப்புத் தோன்றும் பாடிவரும் ஓடைகுளிர் காய்ந்து கொள்ளும் பருத்திக்குச் சிரிப்புவரும் மான்கள் துள்ளும்! குன்றுமுதல் கூழாங்கல் வரையில், தென்னங் குருத்துமுதல் அறுகம்புல் வரையில், இங்கே இன்றுமுதல் நான்குதிங்கள் வரையில்; கோடை இழுத்தடிக்கும் நம்மையெல்லாம் தரையில் என்றேன். நன்கினிமேல் புதுநெருப்பு நாட கங்கள் நம்நாட்டில் பகற்பொழுதில் நடக்கும் என்றான். தென்றலுண்டு நம்மையது தழுவும் என்றேன். தேவையில்லை அதன்தழுவல் எனக்கென் றிட்டான். பனியதனால் பிணிபெருகும்; வான வில்லைப் பார்ப்பதனால் எழில்குறையும், வானம் சிந்தும் இனியமழை அதிகரித்தால் தீமை தோன்றும்; இளவேனிற் சுடுவதனால் உணர்ச்சி யூறும்; கனியதனால் சுவைநமக்குச் சேரும்: தேமாங் கனிவேண்டின் கோடைவெயில் நமக்கு வேண்டும்! இனியிங்கே ஆனந்தக் களிப்பே பொங்கும்" என்றுரைத்தான் தலையசைத்தேன் மூங்கில் போல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/202&oldid=926783" இலிருந்து மீள்விக்கப்பட்டது