பக்கம்:தேன்மழை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 224 பங்காருப் பத்தரிடம் பயின்று மீசை பாரதியைப் பின்பற்றி நடையை மாற்றிச் சிங்கார வேலவனைப் பாடிப் பின்னர் சீர்த்திருத்தத் துறைகண்டு பெரியா ருக்கோர் நங்கூரம் போன்றிருந்து பிரிந்து காஞ்சி நல்லறிஞர் கழகத்தால் பெருமை பெற்றுத் தங்காமல் விரைந்தோடும் நீர்போல் ஒடித் தரித்திரத்தில் சரித்திரத்தை முடித்துக்கொண்டார். வெடித்தவுடன் விரைந்தோடும் ஆம ணக்கின் விதையென்றால் பாரதிக்குப் பொருந்தும்; கீழே அடித்தவுடன் மேலெழும்பும் பந்தென் றிட்டால் அதுபுரட்சிக் கவிஞருக்கே பொருந்தும், வீரம் தொடுத்தமைத்த பாவேந்தர் பாடல் மக்கள் துணைக்குதவும் தொகைப்பாடல்! வல்வில் ஓரி விடுத்தகனை தவறியதே இல்லை! வேந்தர் வெடிமருந்துக் கவிதைகளும் தோற்ற தில்லை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/227&oldid=926808" இலிருந்து மீள்விக்கப்பட்டது