பக்கம்:தேன்மழை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 250 குன்றனென்றும் காடனென்றும் மருத னென்றும் குமணனென்றும் பெயரிடலாம் ஆண்கட் கெல்லாம் அன்னமென்றும் அன்றிலென்றும் அல்லி என்றும் - அருவியென்றும் பெயரிடலாம் பெண்டிர்க்கெல்லாம் மின்னெனவே பெண்ணுருவம் மின்னு மாயின் மின்னியென்றும் பெயரிடலாம்; தமிழ ரெல்லாம் என்றுமுள செந்தமிழில் பெய ரிடாமல் இரவல்மொழிப் பெயரிடுதல் அடிமைத் தன்மை! இடுகுறியால் காரணத்தால் அந்த நாளில் இருந்தவர்கள் பெயரிட்டார். இந்த நாளில் தொடுகுறிசாத் திரம்பார்த்தே பெயரை வைக்கத் தொடங்குகின்றார். தோழர்களே இவ்வாறான நடைமுறையால் நல்லதமிழ் வளர்வ தற்கு ஞாயமுண்டா கூறுங்கள்? செங்கண் வீரப் படைமுறையின் வழிவந்த தமிழநாட் டீரே பழுத்ததமிழ்ப் பெயரிடுவீர் குழந்தை கட்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/253&oldid=926834" இலிருந்து மீள்விக்கப்பட்டது