பக்கம்:தேன்மழை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 தரை மீன் சூரியனை நோக்குகின்ற நெஞ்சிப் பூப்போல் தோகையவள் மாவீரன் முகத்தை நோக்கி, 'நீரைவிட நுட்பமெது சொல்வீர் என்றாள். நெய்யென்றான்; நெய்யைவிடப் புகையே என்றாள். "தாரணியில் அனிச்சமலர் உனக்கு நுட்பம் தமிழ்க்குயிலே, உன்னுடலே எனக்கு நுட்பம் பேரழகே எனைமயக்கும் மதுவாம்!" என்றான். பெரியதிரு வாய்மொழியாள் சிறுசொல் செய்தாள். 'தண்ணீரின் ஏப்பந்தான் அலைகள் என்றான். 'தமிழ்க்கலைகள் வாழ்நாளை வளர்க்கும்' என்றாள். 'விண்மீது விளங்குகின்ற நிலவின் மீது வீடுகட்டும் காலமொன்று வந்தே தீரும் ఉraTGఇు கதை சொல்லும் மாதே' என்றான். கட்டழகி மொட்டுமொட்டாய்ச் சிரித்தாள்: 'யாவும் பெண்ணாலே ஆகு மென்றான். அதனைக் கேட்டுப் பிழிந்ததொரு புடவையெனக் குனிந்து கொண்டாள். பெரியபுகழ் பெற்றவனை மணந்த மங்கை பின்புறத்தில் தொங்குகின்ற மேகம்' என்னும் கரியகுழல் தனைக்கரத்தால் பிழிந்து கொண்டே கரையேறித் தேர்நின்ற இடத்தில் நின்றாள். தரைதடவிக் கரைதடவும் பொன்னி யாற்றில் தமிழ்வேந்தன் நுரைதடவி நீந்தும் வேளை, அரியரியாய் வரிவரியாய் வடிவம் காட்டும் அலைகளினால் ஆட்டனத்தி இழுக்கப் பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/47&oldid=926862" இலிருந்து மீள்விக்கப்பட்டது