பக்கம்:தேன்மழை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 66 அல்லாவு தீன்தீய தீயைப் போன்றோன் அன்னவனோ மலந்தேடும் ஈயைப் போன்றோன். பொல்லாதோன் கல்லாதோன் பொய்மை பேசிப் பொழுதினையே கருக்கிவந்த புல்லன். தச்சன் கொல்வானே நீள்மரத்தை அதுபோல் கத்திக் கொலைசெய்தோன்; அக்கொடியோன் ஆண்டநாளில் எல்லோரும் அல்லலுற்றார்; சிரச்சே தத்தின் எண்ணிக்கை ஏறியதாம் வயது போல! வேல்மீதும் வாள்மீதும் போரின் மீதும் வீரரெல்லாம் அன்றாடம் ஆசை வைப்பர். பால்மீது சேர்கின்ற பிரைமோர் போன்று பரவுகின்ற காமத்தால் கருகி வந்தோன் தோல்மீதும் தொடைமீதும் சித்துர் மன்னன் தொட்டனைத்த கட்டழகி முகத்தின் மீதும் கால்மீதும் கண்மீதும் மூடும் மேடைக் கனிமீதும் ஆசைவைத்தான் படையெடுத்தான். கூற்றுவினை ஆடவர்கள் என்னும் வீரர் கொதித்தெதிர்க்க சித்தூரின் கோட்டை வேந்தன் ஆற்றருகில் சென்றுநின்றே அவனைத் தாக்க அலாவுத்தீன் பீம்சிங்கை நோக்கி, அந்த மாற்றறியாப் பசும்பொன்னை நின்னைக் கொஞ்சம் மதுமதியை ஒருமுறை.நான் பார்த்தால் போதும் தோற்றவன்போல் திரும்பிப் போய்விடுவேன்' என்றான். தூங்காத வாள்வேந்தன் ஒப்புக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/69&oldid=926884" இலிருந்து மீள்விக்கப்பட்டது