பக்கம்:தேன்மழை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மேகம் மூவருலா நூல்படித்துக் கொண் டிருந்தாள் மூத்தநிலா வெளிச்சத்தில் மோக னாங்கி. ஆவலொடு காணவந்தோன் காள மேகம் ஆரணங்கே என்றழைத்தான் பேசவில்லை. காவியமே கடல்நீரை உந்தித் தள்ளும் காவிரியே கதவுதனைத் திறவாய் என்றான். பாவையவள் தெருக்கதவைத் திறந்தா ளில்லை! பழம்பழுத்த வாய்திறந்தும் பேச வில்லை! மங்கலப்பொன் போன்றவளே! ஏனோ இந்த மனமாற்றம் எனக்கேட்க நங்கை நோக்கி இங்கிருப்போர் எனையிகழா திருக்க வேண்டின் எம்மத்தில் நீர்சேர வேண்டும்; இன்றேல் தங்களையான் இனித்தீண்டேன் வேண்டேன்' என்றாள். தமிழ்க்கவிஞன் திருநீற்றுச் சைவ னானான். செங்கமலம் தெருக்கதவைத் திறக்க நெற்றிச் சீர்திருத்தம் செய்துகொண்டோன் உள்ளே வந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/72&oldid=926887" இலிருந்து மீள்விக்கப்பட்டது