பக்கம்:தேன்மழை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 76 வியக்கின்றேன் குற்றத்தைக் குணத்தை யெல்லாம் வெளிப்படையாய் நீயுரைத்தாய் பாபர் போல. மயக்கத்தால் வறுமையினால் புவியில் வாழும் மாந்தரெலாம் குற்றங்கள் புரிவ துண்டு. நயத்தக்க நாகரிகம் வளர வேண்டி நானுன்னை மன்னித்தேன். இனிமே லேனும் செயத்தக்க செய்திடுக ஈங்க மர்ந்து செந்தமிழ்க்குப் பெருந்தொண்டு புரிக என்றான். எண்சேர்ந்த நெஞ்சத்தான் சீதக் காதி இவ்வாறு கூறிடவே அவனை நோக்கிப் பண்சேர்ந்த பைந்தமிழில் புலமை பெற்றோர் பசிதீர்த்து வருபவரே இதுநாள் மட்டும் மண்சேர்ந்த குடிசையிலே விாழ்ந்த என்னை மதிசேர்ந்த புலவரொடு சேர்த்து வைத்தீர் கண்சேர்ந்த ஒளிபெற்றேன் பெருமை பெற்றேன் கணிசேர்ந்த சுவைபெற்றேன் என்றான் கள்வன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/79&oldid=926894" இலிருந்து மீள்விக்கப்பட்டது