பக்கம்:தேன்மழை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலப்பை கருமைபெற்ற கடல்நீரும் நீல வானும் கைகோத்துக் கொண்டிருக்கும் இடத்தை விட்டுப் பெருமைபெற்ற செங்கதிரோன் மேற்கே சென்றான். பேச்சளந்து கொண்டுசிலர் கிழக்கே சென்றார். உரிமைபெற்ற வரிவண்டு பூத்த பூவை ஊதிற்று. நீராடப் பெண்டிர் சென்றார். எருமைபெற்ற ஏருழவன் குப்பன் என்பான் ஈரவயல் வெளிநோக்கி விரைந்து சென்றான். தங்காமல் தயங்காமல் வாய்க்கால் வெள்ளம் ததும்பிவழிந் தோடிவரக் கண்ட குப்பன் . வங்காளக் கடல்நோக்கி ஓடும் நீரே வயலுக்குப் போவென்று பாய்ச்ச லானான். சங்கீதக் குரலுடையோன் எட்டி என்பான் தனித்தமிழில் மருதப்பண் பாட வேலுர் வெங்கோடன் வெண்காந்தள் அரும்பு போன்று விளங்கியகூர் கொழுமுனையால் சேறு செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/90&oldid=926905" இலிருந்து மீள்விக்கப்பட்டது