பக்கம்:தேன்மழை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 கலப்பை சாவதெனில் உரிமைக்குச் சாவ தன்றோ தமிழ்நாட்டின் வரலாற்று வீரமாகும் கூவுவதிற் பயனில்லை என்றான் குப்பன். குறிஞ்சியென்பான் "ஆமப்பாஆம்ஆம்" என்றான், நாவரசன் கொக்கரித்தான் அப்போ தங்கே நல்லுரான் கலப்பையொடு வந்து சேர்ந்தான். ஏவியெனும் பெருடையான் "கலப்பை என்றே ஏனிதனை அழைக்கின்றோம் குப்பா" என்றான். நிலத்திலுள்ள மேல்மண்ணைக் கீழ்மண் னோடு நீண்டுள்ள கூர்முனையால் ஒன்று கூட்டிக் கலப்புதனை உண்டாக்கும் கார ணத்தால் கலப்பையென்று பெயரிட்டார். கலப்பை மூலம் நிலத்தில்நாம் உண்டாக்கும் கல்ப்பை மாந்தர் நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மாயின் கலப்புமணம் உருவாக வழியுண் டாகும் கலப்புமணத் தால்சாதி செத்தே போகும்! என்றுரைத்தான் கல்லாடம் கற்ற குப்பன். எல்லோரும் தலையசைத்தர்ர். மீண்டும் குப்பன் குன்றுடுத்த நம்நாட்டில் முன்னர் இந்தக் கொடுமையெலாம் இருந்ததில்லை, இவற்றை எல்லாம் தின்றுவிட்டுத் துங்குகின்ற தமிழர் கட்குத் தீவிரமாக எடுத்துரைக்க வேண்டும் என்றான். ஒன்றுபட்டு வாழ்வதற்குத் தடையாய் நிற்கும் ஒருகோடி வேற்றுமையை ஒழிப்போம் என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/92&oldid=926907" இலிருந்து மீள்விக்கப்பட்டது