பக்கம்:தேன்மழை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மி தந்திபுரி சென்றிருந்த செவ்வேள் அந்தி சாய்கின்ற நேரத்தில் திரும்ப லானான். அந்திவிளக் கேற்றிக்கொண் டிருந்தார் பெண்டிர். அப்போது குளிர்வானும் விளக்கேற் றிற்று! சந்திரனை அண்ணாந்து பார்த்தான் செவ்வேள். தமிழ்நிலவில் தன்மனைவி முகத்தைக் கண்டான், உந்தியெழும் உணர்ச்சியினால் கொந்த ளித்தான். உள்ளத்தால் இல்லத்து மாதைத் தொட்டான். அசைந்தாடும் பூங்கொடியைச் செவ்வேள் கண்டான். அக்கொடியில் எழில்நங்கை இடையைக் கண்டான். பசியோடு வந்தார்க்கு வெண்சோ றிட்ட பாவையவள் புன்னகையை பூவிற் கண்டான். திசைதோறும் இல்லிறைவி வடிவம் கண்டான். செவ்வல்லி மலரில்வாய் மலரைக் கண்டான். இசைபாடும் கருங்குயிலின் குரலின் பத்தில் ஏந்திழையின் தீந்தமிழ்த்தேன் குரலைக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/96&oldid=926911" இலிருந்து மீள்விக்கப்பட்டது