பக்கம்:தேவநேயம் 1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

312 தேவநேயம் ம. ஆயிரம், கு. ஆயிரெ, க. சாவிர, து. சாவிர, துட சோவெர் (f), கோ. சாவர்ம். இ.ஹசார் (hazafr), பெ. ஹசார் (hazafr), Akhilloi for khesloi. வடமொழியில் மூலமில்லை . அகரமுதல் சகர முதலாய்த் திரிவதும் யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம் என்பது சாவிர எனத் திரிந்தது. ஒ.நோ, இளை - சிளை, உதை - சுதை, உவணம் - சுவணம், ஏண் சேண். நீயிர் - நீவிர், சேயடி - சேவடி. கன்னடச் சொல்லை யொட்டியே துளுவச் சொல்லும், கன்னடத் திரிபான படகச் சொல்லை யொட்டியே துடவச் சொல்லும் கோத்தச் சொல்லும், இவற்றை யொட்டியே வடசொல்லும், சகர முதலாய்த் திரிந்துள்ளன. இதை அறியாது, பேரா. பரோ வட சொல்லையே தென்சொற்கு மூலமாகத் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப் பற்றிய தம் தவற்றுக் கருத்தினாலேயே. (வ.வ, 84-85.) ஆர் ஆர் - அர (இ.வே.) ஆர்தல் = பொருந்துதல், ஆர் = சக்கரக் குறட்டிலும் வட்டை யிலும் பொருந்தும் சட்ட ம் (spoke, radius). ஆர்கெழு குறடுசூட்டாழி போன்று (சீவக. 828). வடமொழியிற் காட்டப்பெறும் வேர் ரு (Ti) என்பதே. அறு இரி என்னும் தென்சொல்லின் திரிபாகும். (வ.வ85) ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் - ஆர்பாட்ட (bh). ஆர்த்தல் = ஆரவாரித்தல், ஆர்ப்பு + ஆட்டம் - ஆர்ப்பாட்டம் = ஆரவாரம். தெ. ஆர்பாட்ட மு (bh). (வ.வ85.) ஆரம் ஆரம்' - ஆர ஆர் - ஆரம். “ஆரஞ் சூழ்ந்த அயில்வாய் தேமி” (சிறுபாண். 253), வ.வ.85. | ஆரம்" - ஹார ஆர்தல் = பொருந்துதல், ஆர் - ஆரம் = பல மலர்கள் அல்லது மணிகள் பொருந்திய மாலை, ஒ.நோ. தொடு - தொடை (வ.வ. 84.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/329&oldid=1432049" இலிருந்து மீள்விக்கப்பட்டது