பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தேவலீலைகள் !

கூட்டாதா! பூலோகத்தின் பிதா என்ற பட்டத்தை யாருக் குச் சூட்டினரோ, அந்த பிதாவின் காமப்பித்தம், பெற்ற மகளைப் பெண்டாளும் அளவுக்குச் சென்றதாகக் கதை எழுதிப் பிறகு, "அப்படிப்பட்ட பிரமனைப் பூஜை செய்ய வேண்டும். அந்தப் பிரமனின் கட்டளையே குல தர்மம் என்று கூறுவது எவ்வளவுபோக்கிரித்தனமான புரட்டு, அதனை நம்புவது எத்தகைய கேவலமான குருட் டுக் கொள்கை என்பதை நமது மக்கள் சிந்திக்க மறுக் கிறார்கள், மடமையை வளர்க்கிறார்கள்; கொடுமைக்கு ஆளாகித் தவிக்கிறார்கள்; தீயைத் தொட்டுவிட்டுத் திமி திமி என்று கூத்தாடுவதுபோல; மலத்தைமிதித்துவிட்டு - ஐயையே என்று அசங்கியப் படுவதுபோல, மடமை நிறைந்த கருத்துக்களை --கட்டுக் கதைகளை நம்பிக் கொண்டு, பிறகு இழிநிலை பெற்று, இழிநிலைபெற்றதற் காகப் பிறகு மனம் வருந்துவது சரியா?

பிரம்மனின் பிரதாபத்திலே ஒன்று, பார்வதியை அவர் பெண்டாள நினைத்தது, ஆரியர்களின் கண்டனத் துக்கு ஆளான அரக்கர்கள் செய்ததில்லை அப்படிப்பட்ட அக்ரமங்களை, பிரமன் மும்மூர்த்திகளில் ஒருவர், மும்மூர்த்திகளிலே முதல்வர் சிவன், இருவருக்கும் ஐந்து சிரங்களாம்: அம்மை பார்வதி ஒரு தினம், எந்த வனத்திலே சென்றார். அங்கு பிரமன் உலாவிக்கொண் டிருந்தார்... தலை ஐந்து இருக்கவே. பார்வதி தன் நாய எனே அவர் என்று எண்ணிக்கொண்டு, அன்ன மென்று நடந்து சென்று அவரைத் தழுவிக்கொண்டா ராம் அம்மையாருக்குத்தான் அவசரத்தால் வந்தது இந்த விபத்து. அயனுக்குத் தெரியுமல்லவா? பார்வதி வின் கரம் மேலே பட்டதும் கூவியிருக்கக்கூடாதா? -