பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னுதுரை இதென்ன விசித்திரம் பாருங்கள்! கொட்டாவி யிலே குழந்தை! தண்ணீரில் மூழ்கியதும் பிசாசு! தேவர் களே! உங்களின் வாழ்வு இவ்வளவு ஆபத்தானது தானா? என்று பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. பிர மன், "ஓ! மகனே சிந்தூரா! வரமொன்று தருவேன் பெற்றுக் கொள். நீ யாரைக் கட்டித்தழுவினாலும் அவர்கள் இறந்து போகக் கடவர் என்று அருளி நாரதர் வந்தாராம் அவ் வழியே! வரத்தைப் பரீட் சிக்க, சிந்தூரன் நாரதரைத் தழுவிக்கொள்ளச் செல்ல, இதை அறிந்து நாரதர் ஒரு தந்திரம் செய்தார். வரத் தைப் பரீட்சிக்க, வரமளித்த பிரமனையே தழுவிப்பார் என்ராம், போனான் சிந்தூரன்! பிரமாத கோபம் பிரமாவுக்கு. "ஏ சிந்தாரா, உன்னைக் கணேசர் கொல் வார், போ என்று சபித்து விட்டார். மறைந்தார். பின்னர், பிரமனைத் தேடிச்சிந்தூரன் வைகுந்தம் சென் நான், விஷ்ணு, "நான் சாமான்யனப்பா, சிந்தூரா! உன் சக்திக்கேற்றவர் சிவனாரே. அங்கு போய்க் காட்டு உன் திறனை என்று கூறிட, கைலாயம் சென்று சிவனைத் தேடினான் சிந்தூரன். அவர் இல்லை அங்கு! பார்வதிக் கும் சிந்தூரனுக்கும் பலத்த விவாதம் நடந்ததாம்; சிவனர் வந்து சேர்ந்தார் நல்ல சமயத்திலே. சிந்தூர - னுடன் சண்டையிட்டு மூர்ச்சையானார். பார்வதியார் 'பதைத்து விஷ்ணுவை நோக்கி, "அறியே! என் வயிற் பிலே பிறந்து, இந்தச் சிந்தூரனைக் கொல்ல என்று கட்டளையிட மஹாவிஷ்ணு மலைமகள் வயிற்றிலே காமுகத்தோடு தோன்றிசிந்தூரனைச் சம்ஹாரம் செய் தார். அந்த கஜமுகன் தான் விநாயகர்! பார்வதி புத்திரர், மஹாவிஷ்ணுவின் அவதாரம். பிரமனின் ஒரு பொல்' லாத கொட்டாவி இவ்வளவுக்கும் காரணம்!!