பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவலோகப் பாரிஜாதம் வேடிக்கைதான் ! உமையவள் ஒற்றைக்கால் ஊசிமுனைத் தவத்தை மனமார்ந்த வீர வைராக்கியத்தோடும் நெஞ்சார்ந்தத் தீவிர நேசத்தோடும் இன்னமும் கூட மேற்கொண்டிருக் கின்றாளே...? அதனாலேதான், பிறைசூடி ஈசன் இன்னமும்கூட அர்த்தமுள்ள கள்ள விழிப்பார்வையை அர்த்தத்தோடு சிந்திக் கொண்டே இருக்கிறானோ?... பார்வதி சுயப்பிரக்ஞை அடைந்தாள்!-அழகான கண் களின் ஓரத்திலே, அழகான கண்ணிர் அழகாகவே கசிந்தது வழக்கம்போலவே, அவள் இப்போதும் புடைவை முந் தானையைக் கொய்து, கண்ணிரைத் துடைத்துக் கொள்ள வில்லைதான்!-சுடுகின்ற கண் ணிரைச் சூடு மாறாமல உட னுக்குடன் துடைத்துக்கொள்ளவில்லையென்றால் இந்த மண் உலகம்-பாழாய்ப் போன இந்த மண் உலகம், அஸ்த மித்து விடுமா என்ன ? வெளியே, ரேழியிலிருந்து படங்கி உள்ளே இரண்டாங்கட்டுக் கூடத்துக்குத் திரும்புகிறாள். காகம் கரைகிறது. காலமும் கரைகிறது. ஆத்மநாதன் தம்மை மறந்து உறங்கிக் கொண்டிருக் கிறார்; கவலைகளையும் கஷ்டங்களையும் அவர் அந்நேரத் தில் மறந்து விட்டிருக்க வேண்டும் ஜன்னல் கம்பிகளின் வழியாகப் படர்ந்திருந்த பின் நிலவின் கம்பீரம் குறையாத வெளிச்சத்தில் அவருடைய முகம் அன்போடும் கருணை யோடும் பாசத்தோடும் பரிவோடும் விளங்கியது.