பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


மனித நேசமுள்ள அன்பான இடத்திலே கட்டிக் கொடுத் திட்டா, என்னோட மனச் சுமை முழுசாவே கழிஞ்சிடும்: நானும் உடம்புதேறி ஒடியாடி நடமாட ஆரம்பிச்சி விடு வேன்; அப்புறம் எங்களுக்குக் கவலை ஏது கஷ்டம் ஏது? நாங்க நினைக்கிற மாதிரியே, எல்லாம் தெரிஞ்ச ஆண்ட வனும் நினைச்சால்தான். நாங்க நல்லதனமாகத் தப்பிக்க முடியும் ! எங்க குடும்பமும் நல்ல படியாகத் தப்பிப் பிழைக்க முடியும். வயகக்கு வந்திட்ட பெண்ணை நானலஞ்சு வருஷத்துக்கு மேலேயும் வீட்டுக்குள்ளே போட்டுப் பூட்டி வச்சிருந்தா ஊர் உலகமும் ஜாதி சமூகமும் ஏசாதா, என்ன ?- அப்பாவின் தலைமாட்டில் குந்திக்கொண்டு பரம ரகசியமாக அம்மா ஒதியது நேற்றுச் சொன்ன மாதிரி இருக்கிறது ! - சலனம் விளைந்த சடுதியில் சாந்தியும் விளையவே, சமன் நிலை அடைந்தாள் பார்வதி. 'அம்மா !' என்று குரல் எழுப்பி, சூடான காப்பியோடு சிவகாமி அம்மாளை எழுப்பினாள். 'அம்மாடி கமலி !' அமமா வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள். நேருக்கு நேராக - பார்வதி மோகினிச் சிலையாக நின்று கொண்டி ருந்தாள், 'காப்பி போட்டுக் கொண்டாந்திட்டியாம்மா ?” "ஆமாம்மா !” 'பாரு குட்டின்னா. பாருக் குட்டியேதான் !'