பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


ஓ ! டம்பப்பை சிரிக்கிறது. நாய் வேஷம் ! சே ! ஆற்றாமை பாதியும் ஆத் திரம் பாதியுமாக அவள் தன்னைத்தானே நொந்து கொண்டாள். நாய்க்குப் போட்டியாக மனதிற்குள்ளேயே குரைத்துப் பார்த்துக் கொண்டாள். இப்போது அவளும் சிரிக்கிறாள். “ அம்மாடியோ பாருகுட்டி வாம்மா வந்து இட்டிலி சாப்பிடம்மா ; உனக்கு நாக்குக்கு ருசியா உப்பு முனைப்பாகப் போட்டுப் புதினா துகையல் தயார்ப் பண்ணி இருக்கேன்; வாம்மா !” இந்தா வந்திட்டேன்; தம்பி சாப்பிட்டானாக் கும்!... அப்படின்னா, எனக்கும் நேரம் ஆச்சுத்தான். இதோ வந்துட்டேன் நாலே நாலு இட்டிலிக்குக் கூட ஏப்பம் வரும் போலும் இதழ்க்கரையில் துளிர்த்த ஈரத்தை மட்டும் சேலை முந்தானை துடைத்துக் கொண்டது. ' உங்கள் வி ரு ப் ப ம் ரேடியோவில் ஒலிக்கிறது ; எதிரொலிக்கிறது. 'அப்பா, நான் போயிட்டு வாரேன் ! 'பத்திரமாய்ப் போயிட்டு வாம்மா !” போய் வச்றேன். அம்மா !' "மகராசியாகப் போய்வா, பாருக்குட்டி!' அதோ, புறப்பட்டு விட்டாள் குமாரி பார்வதி பி.ஏ. ...