பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


பார்வதியைப் பார்த்தது மூலமுதலான மகாலட்சுமி யைத் தரிசித்ததுபோலவே இருக்கிறதாம் ! - காஷியர் சுப்பையா விமர்சனம் செய்தார். இவரும் வலையப்பட்டி தான். ரோசி பரிதாபம் மேலிட ஒடி வந்தாள் ; மடித் திருந்த பக்கத்தைச் சுட்டினாள். "நாட்டு மக்களுக்குப் பிரதமர் ராஜிவ்காந்தியின் அறை கூவல் 1 - பார்வதி வாசித்தாள். 'அதுக்குக் கீழே... !' என்று திருத்தினாள் சிலுவைக் காரி. பார்வதி வாசித்தாள் : கொடுத்த கெடுப்பிரகாரம் வரதட்சணைப்பாக்கியைக் கொடுக்காததால் வெகுண்டெழுந்த கணவன், கட்டிய மனைவியையே நிர்வாணமாக்கித் துன்புறுத்திக் கடைசி யில் அவளைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டான்' பார்வதியின் எண்சாண்மேனி ஒரு சாணாகக் குறுகி விட்டது ; வேர்த்துக் கொட்டியது இப்படியும் ஒரு படு மோசமான காட்டுமிராண்டிப் புருஷன், பண்பாடு, பண் பாடுன்னு அல்லும் பகலும் வாய்கிழியப் பேசிக்கினு இருக்கிற இந்த அருமைத் தமிழ்மண்ணிலே, இன்னமும் உயிரோடு இருக்கானே ? அடப்பாவி மனுஷா சே'ஆத்திரம் தூள் பறக்கக் கத்தினாள் பார்வதி. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் மட்டுமல்ல சமூகக் களங்கமும்கூட!' ரேடியோ பாடம் படித்தது!... மெளனம் ஒரு பாஷை அல்ல ; அது ஒரு சோதனை! தோழிமார்கள் மெளனம் கலைந்தனர்,