பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


தைச் சேர்ந்தவர் தான் அப்படின்னு நீ தன்மானத் தோடவும் சுயகெளரவத்தோடேயும் சொல்லியிருந்தா நான் உன்னை ஏன் ஏசப் போறேன் ? சரி, சீக்கிரமா விஷயத்துக்கு வா. இருட்டிப் போச்சு; என்னை எங்க வீட்டிலே தேடுவாங்க,' என்று தூண்டுதல் அளித்தாள் பார்வதி. தாரா அப்போது ஆசைக்கனவுகளின் நிர்வான எழிலிலே மங்கியிருக்கலாம்: கவர்ச்சி மேனியெங்கும் பெருகிவழிந்திட்ட அவளுக்கு அவளது இடது கன்னத்து மச்சம் நிச்சயம் ஒரு “ப்ளஸ் பாயிண்ட் தான்-தோழியின் கைபட்டு விழிப்படைந்தாள். இதற்கிடையில் ஜோடியாக வந்த தாராவும் செந் திலும் விபத்துக்கு உள்ளாகி ஜோடி பிரிந்த காட்சியையும் பார்வதியின் மனம் படம் போட்டுக் காட்டியது. தீடீரென்று புகைப்படலம் விரிந்தது. யாரோ விடலை ஒருவன் வழி தவறி நடந்து, ஒர் ஒரத் தில் ஒதுங்கி நின்ற தோழிமார் இருவருக்கும் அருகிலே வந்து நின்று முறைத்தவனாகப் புகை கக்கிக் கொண்டிருந் தான். பார்வதி ஆண்மையோடு சினந்தாள் : ஏய் சர்க்கார் பாதை அங்கே கிடக்கு ; பாதையைப் பார்த்து நட. இல் லேன்னா, நடக்கிறதே வேறே!” 'சனி' விலகியது. தாரா அமரிக்கையாக முறுவல் பூத்தாள். 'பெண் என்கிறவள் பூவாக இருக்கிறதிலேதான் புண்ணியம் உண்டு என்று பேசுகிற வாதத்திலே இருக்கிற நியாயம், பெண் என்பவள் யூ நாகமாக இருக்கிறதாலே