பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 115. சிவனும் மந்திரமும் (105) (i) சிவனது மந்திரம் நமச்சிவாய #. சிவனர் ஐந்தெழுத் தும் ஆயவர்; ஐந்தெழுத்தே அவரது திருநாமம் ; அவரே மந்திரமும், தந்திரமும், மறைப்பொருளும் ஆவார் ; மறை கலந்த மந்திரத்தால் அவரை ր:րr ஆட்டி வழிபட்டால் அவர் வாட்ைசியைக் கொடுப்பார். H. (ii) மந்திரம் (5.3-6 (8)) கிரிபுரத்காரின் தேர் மந்திர சக்தியால் விண்ணிற் பறவை போலச் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. 1 16. சிவனும் மூவரும் (106) சிவன் மூவரில் முதல்வன் ; ஒருருவில் மூவுருவாய் ஒன்ருய் கின்றவன்; மூவர்க்கும் மூர்த்தி; மூவரும் ஆனவன்; மூன்று மூர்த்திகளுள் கின்று, தொழில் மூன்று இயற்று பவன்; அயனகி, மாலாகி அதற்கப்பால் ஒன்ருவான். 117. சிவனும் வெண்மையும் (107) சிவபிரான் உறையும் தலம் வெண்காடு ; அவர் அணிவன வெண்டலை, வெண்ணிறு, வெண்னுால், வெண் மதி, (எனக்கின்) வெள்ளெயிலு, வெள்ளெருக்கு; அவர் ஏந்துவது வெண்மழு ; அவர் ஏறுவது வெள்ளேறு. 118. சைவ ஒழுக்கம், சின்னம் (108) கித்தலும் புலர்வதன்முன் காலையில் எழுந்து, பூக்கூடை யில் மலர்பறித்து வந்து, திருவெண்ணிறணிந்து, கண்டி பூண்டு, திருக்கோயிலுக்குப் போய்த், கிருக்கோயிலைப் பெருக்கி, மெழுகி, கிரம்ப நீரும், நெய்யும், பாலும் கொண்டு ஆட்டி (அபிடேகம் செய்து), எருக்கு, குவளை ஆகிய பூமாலை களைப் புனேந்து, தலையாரக் கும்பிட்டுச் சங்கரா போற்றி