பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

 கட்டுரையை” எழுதி அதற்கு மூலமாகிய "தேவார ஒளி நெறி'க்கு முன்னதாகவே வெளியிடுகின்றேன். இக்கட்டுரையில் உள்ள விஷயங்கள் யாவும் ஸ்ரீசம்பந்தப் பெருமானது தேவாரத்தில் உள்ளவையே. அவ்விஷயங்களுக்கு மூலாதாரமான தேவாரப் பகுதிகளைத் தேவார ஒளி நெறியில் மிக எளிதிற் காணலாகும்.

ஒளிநெறி ஆராய்ச்சி “பண்முறைத் தேவாரத்”தையே பின்பற்றித் ‘தோடுடைய’ முதல் ‘கல்லூர்ப் பெருமணம்’ வரை ஒன்று முதல் முந்நூற்று எண்பத்து மூன்றுவரைப் பதிகங்களுக்கும் வரிசையாக எண்ணிட்டுத் திருவிடைவாய்ப் பதிகத்துக்கு எண் 384 அமைத்துக் கொண்டு எழுதப்பட்டது.

இக்கட்டுரையில் முதலாவது ‘கணபதி’யைப் பற்றிக் கூறிப் பிற விஷயங்களே அகராதி முறையில் ‘அகப் பொருள்’ முதலாக ‘ஜெபம்’ ஈறாக 181 தலைப்புக்களில் விளங்க வைத்துள்ளேன். ஒவ்வொரு விஷயத் தலைப்பின் பக்கத்தில் [ ] இக் குறிக்குள் அடங்கிய எண் தேவார ஒளி நெறியில் ௸ விஷயத் தலைப்பைக் குறிக்கும். உதாரணமாக, 2-அகப் பொருள் [3] என்னும் இக்கட்டுரைத் தலைப்பில் 2-என்பது இக்கட்டுரையின் தலைப்பு எண்ணையும், [3] என்பது தேவார ஒளி நெறியில் அகப்பொருளைப் பற்றியுள்ள தலைப்பின் எண்ணையும் குறிக்கும். தேவார ஒளிநெறியே பிரதம நூலாகவும் இக்கட்டுரை அதன் சாரமாய் அந்நூலுக்கு ஒரு அநுபந்தமாய் அமைய வேண்டும் என்பது எனது முதல் எண்ணம். ‘ஒன்றை நினைக்கில் அது ஒழிந்திட் டொன்றாகும்’-என்னும் வாக்கின்படி கட்டுரை முதலில் வெளிவரவும் ஒளிநெறி பின்னர் வெளிவரவும் சிவபிரானது திருவுள்ள மாயிற்று. ஒளி நெறியே முதனூலாதலின் அதன் முகவுரையில் இந்த ஆராய்ச்சியைப் பற்றிக் கூற வேண்டுவன எல்லாம் விரிவாகக் கூறப்படும். பிறிதொரு துணையின்றி எழுதப்