பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தேவார ஒளிநெறிக் கட்டுரை மலர்த்தாதும் பொன்னிறங்காட்டும். மலர்ந்து மனம் வீசும் மாதவி, குள ம், கண்டல்கள், தெங்கு, கமுகு, இவை வளர்ந்தோங்குவன. வண்டினங்கள் ஒலிப்பன. தாமரை மலரும் பொய்கைகளும், நீர்வளர் தரும் தடங் களும் உள்ளன. மடுக்கரையில் கேதகை, மாதவி வளரும். தாமரையின் மீது அன்னங்களும் பறவைகளும் வைகி எழும். மாம்பழம் அகழியில் விழும்; அவ்வோசை கேட்டு வாளை மீன் பூம் பொய்கைக்குச் சென்று வைகும். வயல்கள் பொன்னியல் கொண்டன : அங்குக் கரிய எருமையின் இனம் மிக் கு ப் பொலியும் ; செந்நெல் விளையும் ; கயல்மீன் வாழும்; காரைகள் ஆரல்மீன் வாரும். புகலி-சீருறு நகர் ; பழைய ஊர். நெடிய மதிலைக் கொண்டது. மலையன்ன பெரிய மாடங்களிற் கொடிகள் உயர்ந்தோங்கும். கொடி களின் நெருக்கக்கால் வெயில் தெரியாது. ன் ம ணி மாடங்கள் பொன்னியல் கொண்டன : மதியத்தைக் கொடுவன. புகலி – லக்ஷ்மீ கரம் கொண்ட ஊர். கனக்கு கிகளில்லாத ஊர். குறை விலாப் புகழ்கொண்ட ஊர். ஊழி வெள்ளத்தில் மிதக்க ஊர். விண்ணுேர் புகழும் பதி, வேதியர் பதியாய் விளங்கும் ஊர். சீருந் திறலும் உடையாய செழுவிய செல்வ மறையோர் நிறைந்து இனிது வாழும் ஊர். உயரிய அம்மறையவர் செய்யும் வேள்வியின் புகைபோய் அண்டர் வானத்தை மூடி நின்று ஊரை இருளாக்கும். புகலி நகர்-தளராத வாய்மையாளரும், அறிஞரும், புண்ணியர்களுமான மறையோர்கள் ஏத்தும் ஊர். வேத தேம் வல்லவரும், பிரமனப் போன்றவருமான மறையோர் பயிலும் பதி. நல்லோரும், ஆய்ந்த கலைஞர்களும், இரப் போர்க்குக் காப்பிலார்களும், ஐம்புலன்களைச் செற்ற பெரியோர்களும் வாழும் பதி. மடந்தையரும், மைந்தரும், புண்ணியரும் விரும்பும் ஊர். நல்லார் பயிலும் மறை கேட்டுச் சோலைக் கிளிகளும் சொற்பயிலும் ஊர். கன்னி மார்கள் கிளிக்குச் சொற பயிற்றும் ஊா. செந்தமிழ் பரப்புத் திருப்பதி. இங்குத் தெய்விகத் திருவிழா நிரம்ப நடைபெறும்.