பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தேவார ஒளிநெறிக் கட்டுரை பொழில் அறும் பொழில், அழகிய பொழில்; பொழிலில் மெளவல், மல்லிகை, குரா மலரும் ; மாம்பழம், பலாப் பழம், குலை நிறைந்த தென்னே, குளிர்கொண்ட வாழை - இவை பொலியும் , பலாப்பழமும் தெங்கின் பழமும் விழும். கூவுங் குயில்களும், ஆலும் மயில்களும், இன்சொற் இiப்பிள்ள்ேகளும் வாழும் ; குயில் கன் பெடையொடு பாடும். குடமூக்கு செல்வங் திகழும் ஊர். ஊரில் மாட விதிகள் விள ங்கும். நெடுமாடங்களில் கொடிகள் விளங்கும். மாதர்கள் (காவிரியில்) ஆடித் திளைப்பர். காவிரியின் ஆர்ப்பொலி, வேக ஒலி, புகைகொண்டு அடியார் போற்றும் பூசனையிற் கூத்தொலி இவை நீங்காது திகழும். இக் குடமூக்கைக் தனது இடமாகக்கொண்டு இறைவர், வானேரும் ஏைேரும் எக்க, ஏத்தொலி முழங்கத், தேவி யுடன் விற்றிருக்கின் முர், 77. குடவாயில் :-கடுவாய் கதியின் கரையில் உள்ளது. பைம்பொழிலும் வயலுஞ் சூழ்ந்த ഉണ്. பொழிலிற் குராமலர் வாசம் வீசும். குழலொலிக் தேத்தை வண்டினங்கள் இனிமையாக எழுப்பும். கோடல் மலரில் உள்ள தும்பி வண்டுகள் இசை மிழற்றும். வாழை பொன்போலப் பழுக்கும். கமுகு பவளம்போலப் பழுக்கும். மலைபோலும் மதில் குழும். குடவாயிற் :ோயில்ானது பெருங்கோயில, மாடக்கோயில் எனப் ,டு, கோயில் உயர்ந்த நிலைகளைக் கொண்ட மலே போன்ற அழகிய நெடிய பெருங்கோயில் ; திருவும் தேசுங் கொண்டது. இக்கலம் திருவிழா நிரம்பியது. இங்கு ஆசார மறையோர் அளவு குன் முத குலவிப் போற்றுவர். குடவாயிற் கோயிலேயே கோயிலாகக் கொண்டு இறைவர் | ங்கு மகிழ்ந்து திகழ்ந்தள்ளார். இறைவர் " குடவாயிற் குழகன் எனப்பட்டுள்ளார். 78. குரங்கனின் முட்டம் :-காட்டிடைப் புனல் மல்கும் ஒiர் ; நீர் நிறைவயல் சூழ்ந்த ஊர் ; அழகிய பொழில் சூழ்ந்தது : பொழிலில் மயில் பேடையோ டாடிக் குலவும்: கழுநீர், குவளை மலாக் கயல்மீன் பாயும்.