பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தேவார ஒளிநெறிக் கட்டுரை மலைச்சாரலில் புல்தரையானது பசும்பொன் பரப்பு என விளங்கும். வாழைக்கனியும் ம | ங் க னி யு ம் தேன் பிலிற்றும்; வாழைக்கனி, மாங்கனி, பலாக்கனி தொங்கிப் பொலியும் ; குரவம் பாவை மலர் மணம் வீசும் ; மரவம், (கடப்பு) மல்லிகை, சண்பகம் இவை மலர்ந்து வாடுவ தைக் கண்டு குராமலர் முறுவல் செய்யும் ; கோடல்மலர் கொழுமுனை கூம்பும், மணங் கமழும்; செண்பகம், வேங்கை என்னும் மரங்களில் ஏறிக் கொடிமுல்லை அரும்பு ஈனும்; சுனேகளில் நீலமும் நெய்தலும் மலரும். பாடற்பெடை வண்டு மலர்ப் போகலர்க்கத் தாதவிழும்; ஏலங்கமழ் சோலையில் வண்டு இருந்து யாழ் செய்யும். குருக்கமலர் மணங்கமழும். வண்டு பெடையைப் புல்கிக் குருங்க மர த்தி டிந்து 1ெ வ்வழிப் பண் (ய துகுல காம்.ே ாதி ாகம்) பா டும். வேங்கைக் கொம்பிலிருந் து) வண்டு யா ழ்செ ய் μή ; வண்டு இசை முயல அதைக்கேட்டுக் குயில் அந்த இசையைக் கானும் பயிலும். 'குவளை மலரும்படி வண்டு அரற்றும். மயில் பேடையோடு ஆடும். மந்தி (பெண் குரங்கு) கிளே கிளையாய்ப் பாய்ந்து ண்ேடு உண்டுவிட்ட பலாப்பழங்களைக் கடுவன் (ஆண் குரங்கு) உண்டு குதிக்கும். மலைச்சாரலில் குட்டியுடன் வந்த பெண் குரங்கு குலைவாழைக் கனி உண்ணும். உயர் மூங்கில் வளையப்பாயும் ஆண் குரங்கு நீண்ட மூங்கிலின் மேலிருந்து கிருத்தம் செய்யும். அக்கூத்தைப் பார்க்க வேடுவர்கள் கூவித் கம்மவரைக் கையா லழைப்பார்கள். சாரலிற் பன்றிக் கூட்டங்கள் திரியும். மாதர்கள் சாரலில் உள்ள மணியை வாரித் தின யுண்ணும் கிளியை ஒட்டுவர். மன்றத்தில் மண் முழவம் அதிரும். தலச்சிறப்பு :-தலவிருகம் - குறும்பலா. பெண் யானையும் ஆண் யானையும் வேங்கைமலர்க் கொத்தைத் தலைமேற் சுமந்து சென்று வணங்கி (வழிபட்ட) தலம். திருநீறு பூசியும் புகழ்பாடியும் தொண்டர்கள் பின்வரக் கொடிகளுடன் கித்திய விழா நடைபெறும் தலம். 83. கேதாரம்:-இத்தலத்தில் குரவம், கோங்கம், சுரபுன்னை, ஞாழல், பிண்டி எனப்படும் மரங்களின்மீது