பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 153 o ■ 單 # - - H II. r ". H # பத ஒத்தில், அாக அறையடிகளது அருள யாருக்குக கைக்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது. 141. நெல்வெண்ணெய் :-புவியில் புகழ் நீடிய ஊர். பொழில்-டிேளம் பொழில், நெருங்கிய பொழில். இக்கலம் நீர் மல்கும் தலம். பெரியாரும் அடியாரும் கித்த மும் கொழும் கலம். நெல்வெண்ணெய் நாதரே! உமைக் காண்பவர் அச்சமும் வினையும் இலராவர் ; உமது திருவடிக்கீழ் இருக்கப் பெறுவர். பாக்கியவாளரே உமைச் சார்வார். உம்மை நாடோறும் சொல்லலங்காரம் செய்வதே சொல். உம்மை விரும்புதல் கற்றறிவோர்கள் தம் கடன். உம்மைப் பூசித்துப் புகழ் கூறுவோர் உயர்ந்தோர். உம்மை யன்பு செய்து இருக்கவல்லவர் இடரிலர். உம்மை யன்பொடு பாடும் உள்ளம் உடையவரே பண்பினர். உம்மை அன்புடன் பரவ வல்லவர் பழி யிலர். உம்மைத் தியா னித்தல் பாரில் புகழ் மிக்கவரின் பனபாகும. 142. திருநெல்வேலி :-இங்குப் பொழில்-செடிகள் கிறைந்த பொழில்; நெருங்கிய பொழில். பொழிலில் அழைத்து தாழையில் அளைந்து தென்றல் வந்து உலவும். வண்டுகள் தேனில் அமரும் ; பண் முரலும். மணந்தரு பொழிலில் மந்திகள் பாய்வதால் விழுகின்ற தேனின் திவலைகள் சிந்துவதால் பூந்துறை கமழும். கொன்றை பொன் சொரியச் செருந்தி செம்பொன் மலரும். நெருங் கிய மாடங்கள் மாளிகைமீதுள்ள கொடி மதியைத் தீண்டி அசையும். கொடிமல்கு மாளிகைகளின் குளிகையில். மயில்கள் ஆலும்; மதி தவழும். மலர் மிசைப் பிரமனே நிகர்க்கும் திருந்திய கல்வியாளராகிய மறையவர் வாழும் ஊர் - கிருநெல்வேலி ; அது திக்கெலாம் புகழ் பெற்ற ஊர். கிங்கள் நாள் விழவில் அரிவையர் ஆடலும் மறையவர் கூட்டமும் சிகழும். சிந்துபூந்துறை என்னும் தீர்க்கத் துறை சொல்லப்பட்டுளது. சுவாம் திருநெல் வேலிச் செல்வர் என்பதும், தேவி வடிவுடை ம்ங்கை என்பதும் சொல்லப்பட்டுள.