பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தேவார ஒளிநெறிக் கட்டுரை


(1) எனக்கு மாலையைக் கொடுத்து 'அஞ்சல்' என மொழிவாரோ?

(2) பெருமானுடைய திருóᏗருள் யான் பெறலாகுமோ?

(3) என்னைப் பிரிந்து எனக்கு நீங்காத நோயைத் தந்துவிட்டாரே!

(4) அவர் திருநாமத்தையே பிதற்றி, என் பெரு நலத்தை இழக்கவா!

3. அங்கங்களின் பயன் [4]

கண் அன்புடன் கடவுளைப் பார்க்க, கை அவரை மலர் தூவித் தொழ, செவி அவர் புகழைக் கேட்க, தலை அவருக்குப் பூச் சுமக்க, அவரை வணங்க, நா அவரைப் பாட, அவர் நாமத்தை ஒத, நெஞ்சம் ஒன்றுபட்டு அவர் திருவடி யையே எப்போதும் நினந்துருக, வாய் அவர் சீரையே சொல்ல-இங்ஙனம் அங்கங்கள் வழிப்பட வேண்டும் ; அங்ஙனம் வழிப்படா அங்கங்கள் பயனற் றனவாம்:

4. அடியார் (5, 6, 314)

ஆண் பெண் இருபாலார்களுள்ளும் அடியாருண்டு.

2. அடியார் பத்திநிலை, மெய்ப்பாடு [314] :-கண் - முத்தரும்பும் (நீர் சொரியும்); கை - தலைக்கேறும் ; தலை - சாய்ந்து வணங்கும்; தோள்கள், மேனி - நீறு விளங்கும் ; நா- பாடும் நசையே பூணும்; பேச்சு - இறைவன் பெருமையைப் பற்றியே பேச்சு; குணம் - குற்றமிலாக் குணம்; உள்ளம் - சீலம் மிக்கிருக்கும், பற்றற்று நிற்கும்; இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும்; மனம் - அன்பு நிரம்பி யிருக்கும்; எனை ஆண்டருள் என இறைவன் திருவடி நீழலிலேயே தங்கியிருக்கும் ; அத் திருவடியையே விரும்பிப் பரவி வழிபடும். திருவருட் சிந்தனை யன்றி வேறொன்றையும் அறியாது, இறைவனேயே அபயமெனக் கொண்டு அவனே யே உள்கும், உணரும், பகரும், பணியும், பரவும், பற்றும், பாடும்.