பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தேவார ஒளிநெறிக் கட்டுரை மணஞ்சேரிப் பெருமானர் கழலை ஏத்துங்கள். அவரை அடைய வல்லார்க்கு அல்லல் இல்லை ; இன்பம் எய்தும்; அவரைப் பாட வல்லார் வினை மாயும் : அவரை செப்ப வல்லாரை இடர் சேராது ; அவரைப் மேவிப் பற்றி கின் முர்க்குப் பாவம் இல்லை, வினைபோம்; அவரைப் பற்ருக வாழ்பவரை மேல் வினைகள் அடையா. மணஞ்சேரிப் பெருமானை விரும்புவோர், பேசுவோர் பெரியோர்களே. 178. மயிலாடுதுறை - நரை யுத்திக் கரை பாங் தொழுகி வருங் காவிரியின் தென்கரையில் உள்ள ஊர். காவிரி துரைத்து இரு கரையும் மணி சிந்தும் ஊர். வண்டு திளைக்கத் தேனுெழுகுஞ் சோலையிற் குரவம், சுரபுன்,ை வன்னி மருவும். மவ்வல், மாதவி மண நாறும். வரிவண்டு நிரம்பும். மந்தி மலர் சிந்தும். மாங்கனியின் தேன் கிழிய மந்தி குதிகொள்ளும். கெண்டை யிரை கொண்டு கெளிறுடனிருந்து வண்டல் மணல் கெண்டி நாரை விளையாடும். கமுகின் செங்கனி யுதிர வாளே குதிக்க மடல் விரிந்து கமழ்பூ மணகாறும். மடங்தையர் குடைநத புனல வTஅ டr T_று ம. மாதா கள அனபா ரொலியுடன் காவிரியுள் மவ்வல் மலரை வீசுவதால் மணம் கமழும். வேதியர்களின் ஆகுதிப் புகை வானளாவு சோலைமிசை மாசுபட முகம். தொண்டர்கள் நன்மாமலர் கொண்டுக் காவின் றி இரவும் பகலும் தொழுவார்கள். தொண்டர்கள் கூடிக் கண்டு இசை பாடித் துதிசெய்வர். மயக்கம் தீர்வர். மறையோர் ஒதி வணங்குவர். மயிலாடுதுறை மணநாறு தலம், வரங் கொண்ட கலம். மயல் தீர்க்குங் கலம் ; வான ஞ் சேர் தலம். இறைவருக்கு உகந்த தானம், அவர் விரும்பும் இடம், அவரது காணிப்பூமி, இறைவர் பிணி தர்க்கும் மணி. அஞ்ஞானம் நீங்க வேண்டில் ஞானத்துடன் மயிலாடு துறையை வணங்குங்கள். மயிலாடு துறையை நெஞ்சம் ஒன்றி நினைப்பவரிடம் பிணி அனுகாது. 179. மயிலாப்பூர் :-கடற்கரையூர். கறுஞ் சோலை சூழ்ந்த ஊர். புன்னைக் கானலும், மடல் தெங்கும்