பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தேவார ஒளிநெறிக் கட்டுரை வாணனை வாயா அன்புடன் சொல்லி அன்பு.ழிக்கு ஏத்திப்பாடி வழிபட எவ்வளவோ புண்ணியம் நீ செய்திருக்கவேண்டும். வலஞ்சுழி சாதனைப் புல்கி ஏத்தி யிருப்பவர் பு ண் ணி ய .ே ர. வலஞ்சுழி காதனது தொண்டரோடு கூடுந் தொடர்பையே தொடர்வோம். வலஞ்சுழி நாதனது மெய்த் தொண்டரோடிருந்ததால் நமது வல்வினை நீங்கி ஒழிந்தது. வலஞ்சுழி வாணனைச் சிந்தையில் எப்போதும் கொண்டவர்க்கு உயர்வு ஆம் ; பிணி போம். வலஞ்சுழி யெம்மானைப் பயில வல்லவர் பரகதி காண்பர், மற்றவர் காணுர்; வலஞ்சுழியை வலஞ் செய்பவரது வினையும் துன்பமும் போம். வலஞ்சுழிப் பெருமானைப் பிரியாதவர் பெறுங் கதியைப் பேசில் அளவறுக்க ஒண்ணுது. வள்ளல் வலஞ்சுழி வாணன் ” என்று மருவி கினைந்தேக்கி உள்ளம் உ ருக உணருமின்கள். நோய் அடையாது. வீடும், ஞானமும் வேண்டுதிரேல் வலஞ்சு ழிை ய நாடுமின். 196. வலம்புரம் :-மேகம் படியும் நீண்ட பெரிய சோலேயின் மணங் கமழும் ஊர். வண்டு அணையும் பொழில் விளங்கும் ஊர். வற்றுதல் அறியாப் புனல் வாய்ப்பு உடைய ஊர். வாவியின் நீரைப் பெறும் வயல் வாய்ப்பு உடைய ஊர். வயலில் எருமைகள் படியும் ஊர். கித்தமும் முழவம் அதிரும் ஊர். பறையொலி இசைப்பாட்டொலி நீங்காத் தலம். புகழ் வாழ்க்கை பருத பதி. முத்தித் தொழில் உடைய நான்மறையோர் வாழும் பதி. வானவர் நாடோறும் வந்து இறைஞ்சும் தலம். வலம்புர நன்னகர் ’ எனப்பட்டுள்ளது. 197. வலிதாயம்.-இங்கு மடையிலங்கு பொழிலின் கிழலில் மது விகம். கமுகு, பலா, தேன் நிறையும். மணம் மல்கும். வண்டு வைகும். தேவி பெயர் திருமாது (தாயம்மை). இது இறைவன் திருமாதோடு பிரியாது மகிழ்ந்து உறையும் தலம். மண் கிறைந்த புகழ் கொண்ட தலம். அடியார்கள் வணங்குத் தலம். மந்தி கடுவைேடு கூடி வணங்கும் தலம். உலகோர் பணியப்